பல்லம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வில்பத்து பகுதியில் தனது மனைவி இராணுவ வீரர் ஒருவருடன் கள்ளத் தொடர்பை வைத்திருந்ததாகத் தெரிவித்து மனைவியையும் அவரது தாய், சகோதரி மற்றும் மனைவியுடன் தொடர்பை வைத்திருந்த இராணுவ வீரர் ஆகியோரை கத்தியால் குத்திய நபர் ஒருவரை பல்லம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
தனது மனைவி, கள்ளக் காதலனான குறித்த இராணுவ வீரரை சந்திப்பது மனைவியின் தாயாரின் வீட்டில் என்பதை அறிந்திருந்த சந்தேகநபர், நேற்றுமுன்தினம் மாலை மனைவி தனது தாயாரின் வீட்டிற்கு சென்றபோது, அவரைப் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
இரவு வேளையில் மனைவியின் கள்ளக் காதலன் அந்த வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.
இதன்போது தனது மனைவியும் குறித்த நபரும் அந்த வீட்டில் இருப்பதை தெரிந்துகொண்ட சந்தேகநபர் முதலில் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து கொளுத்திவிட்டு, வீட்டிற்குள் சென்று நால்வரையும் கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார்.