விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் தற்கொலைத்தாரி ஒருவருக்கு உதவிய பெண்ணுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று (16) தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன், அபராதத் தொகையும் விதித்துள்ளது.
ஈ.பி.டி.பி. கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவாநந்தாவை படுகொலை செய்ய முயற்சித்த தற்கொலைத்தாரி ஒருவருக்கு உதவி செய்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயொருவருக்கே இன்று இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
செல்வகுமார் சத்யவேல் என்ற குறித்த சந்கேநபர் சிறையில் இருக்க வேண்டிய காலத்திற்கு அதிகமாகவே சிறைத்தண்டனை அனுபவித்துள்ளதாகவும், 15 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 24 மாதகால சிறைத்தண்டனையும், 25,000 ரூபாய் அபராதத் தொகையையும் விதித்து மேல்நீதிமன்ற நீதிபதி விக்ரம களுஆராய்ச்சி இன்று தீர்ப்பளித்தார்.