கேட் ஏறி குதித்து தப்பி சென்ற சூர்யா ! வைரலாகும் வீடியோ

நடிகர் சூர்யா நடித்துள்ள தான சேர்ந்த கூட்டம் திரைப்படம் இந்த பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. தமிழ், மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் ஆந்திரவிலும் ‘கேங்’ என்ற பெயரில் வெளியாகி உள்ளது.

சூர்யாவிற்கு தமிழ்நாட்டிற்கு வெளியே ஆந்திராவில் வரவேற்பு அதிகம். இந்தால் பட ரிலீசுக்கு பிறகு ரசிகர்களை சந்திக்க ஆந்திரா சென்றார். ஆந்திர மற்றும் தெலுங்கானாவின் பல பகுதிகள் சுற்றுபயணம் செய்து ரசிகர்களை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் ராஜமுந்திரியில் உள்ள ஒரு தியேட்டரில் ரசிகர்களை காண சென்றார். உடனே சூர்யாவை பார்க்க ரசிகர்கள் திரண்டனர். மேலும், ரசிகர்கள் சூரியவிடம் நெருங்கி கூட்டமாக வந்துள்ளனர். இதனால் நிலைமை கையை மீறி போக, உடேன் அங்கு பூட்டி இருந்த கேட்டில் ஏறி குதித்து தப்பி வந்துள்ளார் சூரியா. இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.