பூவுலகில் ஆஞ்சநேயர் வாழ்கிறாரா என்பதை அறிய ஸ்ரீராமரை வழிபடும் அனைத்து பக்தர்களும் விருப்பப்படுவார்கள். ஹனுமான் என்பவர் பலம், தைரியம், சக்தி, வலிமை, ஆற்றல் திறன், ஞானம், பக்தி, பணிதல் மற்றும் சேவையின் சின்னம் என்பதால் தான் நாம் அனைவரும் ஆஞ்சநேயரை வழிபடுகிறோம். சொல்லப்போனால், வீரத்தின் உருவமே ஹனுமான் தான்.
சரி, ஆஞ்சநேயர் இன்னமும் உயிருடன் உள்ளாரா? இந்த கேள்வி பலரின் மனதில் உள்ளது. சாகா வரத்தை பெற்றுள்ளதால், ஆஞ்சநேயர் உயிருடன் தான் இருப்பார் என சமயத்திரு நூல்கள் நிச்சயமாக கூறுகின்றன. அவர் உயிருடன் இருப்பதற்கான சில ஆதாரங்களும், அறிகுறிகளும் இருக்கத் தான் செய்கிறது.
ஆம், பனி படர்ந்த மலைகளில் மிகப்பெரிய பாத அச்சுக்களைக் பார்த்ததாக சிலர் கூறியுள்ளனர். அப்படியானால் இமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் இருக்கிறாரா? சமயத்திரு நூல்களின் படி, ஆஞ்சநேயருக்கு இறப்பு இல்லையோ. அவர் ராமாயணம் காலத்தில் பிறந்தாலும் கூட, மகாபாரதம் காலத்திலும் கூட வாழ்ந்துள்ளார். இதனால் அவர் சிரஞ்சீவியாக இருப்பதற்கு இது ஒரு அத்தாட்சியாகும். இந்த உலகம் அழியும் வரை ராமபிரானின் அனைத்து பக்தர்களும் அணுகக்கூடிய வகையில் அவர் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்தியாவின் சில பகுதிகளில் ராட்சத கால் தடங்கள் உள்ளது. அவை ஆஞ்சநேயருடையது என நம்பப்படுகிறது. ராமேஸ்வரம் அருகில் உள்ள கண்டமத்தனா மலைகளில் ஹனுமான் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என திடமாக நம்பப்படுகிறது.
மேலும், தற்போது இமயமலையில் இவர் இன்னும் உலாவிக் கொண்டிருப்பதாக செய்திகல் பரப்பப்பட்டு வருகிறது.