வாழ்க்கையை தொலைத்த பிரபல நடிகை..!!! மீண்டும் நடிக்க வந்த பரிதாபம்..!!

நடிகர் விஜயுடன் பத்ரி படத்தில் அறிமுகமாகி தெலுங்கில் கொடி கட்டி பறந்தவர் நடிகை பூமிகா. 2007ம் ஆண்டு பரத் தாகூர் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். அந்த நேரத்தில் குடும்ப கஷ்டம் காரணமாக கால் சென்டர் வேலைக்கு கூட போனதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் படங்களில் தலைகாட்ட ஆரம்பித்துள்ளார். தற்போது தமிழில் பிரபுதேவாவுடன் களவாடிய பொழுதுகள் மற்றும் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

desktop-wallpaper-hindi-actress-bhumika-chawla-cute-smile-hd-wallpaper-for-mobile-and-desktop-1482913132

இவர் கணவருடன் சேர்ந்து படத்தயாரிப்பில் ஈடுபட்டதாகவும், அதனால் ஏற்பட்ட நஷ்டத்தை சரிகட்டவே மீண்டும் சினிமாவில் நடிக்க வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த பூமிகா கூறும்போது, நான் கடன் பிரச்னையால் நடிக்க வந்தேன் என்பது உண்மையல்ல.. போதிய அனுபவம் இல்லாததால் நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் நல்ல படம் தயாரித்தேன் என்ற பெயர் எனக்கு கிடைத்துள்ளது.

எப்படி இவ்வாறான தகவல்கள் வெளிவருகிறது என எனக்கு தெரியவில்லை. மீண்டும் நல்ல வேடங்கள் கிடைப்பதால்தான் நான் நடித்து வருகிறேன் என்றார்.