ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, ஆளும் கட்சிக்கு எதிராக கோஷம் போட்டதன் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ஜுலி.ஜல்லிக்கட்டு மூலம் பிரபலமான ஜூலிக்கு பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அவரது உண்மை முகமும் வெளியானதால், நண்பர்களை விட எதிரிகளை அதிகமாக சம்பாதித்தார்.
இதனையடுத்து, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும், தொகுத்து வழங்கியும் வந்த ஜுலி தற்போது ‘உத்தமி’ என்னும் படத்தின் ஹீரோயின் ஆகியுள்ளார். ‘உனக்கு உத்தமினு பேரா’ என ஏற்கனவே நெட்டிசன்கள் கழுவி ஊத்தும் நேரத்தில் மீண்டும் நெட்டிசன்களிடம் மாட்டியுள்ளார் ஜுலி.
தமிழ் திரை உலகில் பிரபலமான நடிகர்களுள் ஒருவரான விஜய் சேதுபதியின் பிறந்த நாளான இன்று ஜூலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “பேசியது இல்லை. பார்த்தது இல்லை. பழகியது இல்லை. ஆனாலும் அன்புகுரியவராகவே திகழ்கிறார். இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார். இதை பார்த்ததும் நெட்டிசன்கள் பலரும் தாறுமாறாக திட்டி வருகின்றனர்.
பேசியது இல்லை..பார்த்தது இல்லை..பழகியது இல்லை..ஆனாலும் அன்புகுரியவராகவே திகழ்கிறார்..இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்.. pic.twitter.com/0MLkclPdas
— maria juliana (@lianajohn28) January 16, 2018
அதில், “நாட்டுல இப்போ உங்கள மாதிரி ஆளுங்களுக்குதான் மௌசு அதிகம்.உங்களுக்காகவே, பெரியார் விருது, அண்ணா விருது எல்லாம் ரெடி ஆகுது வாழ்த்துக்கள். என்ன கண்றாவிடா” என பதிவிட்டுள்ளார். அதே சமயம் மற்றொருவர் , தினகரனையும் ஆறுமாதத்திற்கு முன்பு இப்படித்தான் வெறுத்தோம், இப்போது அவர் கொண்டாடப்படுகிறார்,அதுபோல் ஜூலியும் ஒருநாள் கொண்டாடப்படுவார் என பதிவிட்டுள்ளார்.
என்ன தான் ஆதரவாக ஒரு சிலர் வந்தாலும், வண்டி வண்டியாக கழுவி ஊத்துவதை எப்படி துடைப்பது என தெரியாமல் ஜுலி குழம்பி போய் உள்ளாராம்.