தமிழ்நாட்டின் மதுரை அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்ற மணிகண்ட பிரபு இந்த வருடம் தான் பெற்ற பரிசுகளை ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது.
மொத்தம் 643 காளைகள் வாடிவாசலில் இருந்து திறந்து விடப்பட்டன. போட்டியின் முடிவில் மணிகண்ட பிரபு என்பவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
முதல் பரிசு வென்ற மணிகண்ட பிரபு இந்த வருடம் தான் பெற்ற பரிசுகளை ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.