நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் சீதக்காதி படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று விஜய் சேதுபதியின் பிறந்தநாள். சீதக்காதி அவருடைய 25-வது படம்.
இன்று வெளியான போஸ்டரில் விஜய் சேதுபதி வயதான வேடத்தில் அடையாளம் தெரியாதபடி உள்ளார். இதனால் இந்த போஸ்டருக்கு அதிகப் பாராட்டுகள் கிடைத்துள்ளன.