முன்னணி நடிகையாக வலம் நயன்தாரா, எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ அஜித் என்று விருது வழங்கும் விழாவில் கூறியிருக்கிறார்.
தமிழ் பட உலகில் கொடிகட்டி பறப்பவர் நயன்தாரா. இவர் தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். முன்னணி நாயகர்கள் அனைவருடனும் நடித்து விட்டார்.
தற்போது நாயகியை முன்னிலைப்படுத்தும் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அறம்’ படம் இவருக்கு தனி அந்தஸ்தை பெற்று தந்திருக்கிறது.
இப்படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இந்த படம் வெளியான பிறகு ரசிகர்களுடன் தியேட்டரில் படம் பார்த்தார். அவர்களுடன் கலந்துரையாடினார்.
தன்னை உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்கும் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். நேசிக்கும் ரசிகர்களை மறக்க மாட்டேன் என்று கருத்து தெரிவித்தார்.
என்றாலும், தனக்கு பிடித்தமான ஹீரோ யார்? என்பதை இதுவரை சொன்னது இல்லை. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் நயன்தாரா பங்கேற்றார்.
அவரிடம் உங்களுக்கு மிகவும் பிடித்த ஹீரோ யார் என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த நயன்தாரா. “எனது பேவரிட் ஹீரோ அஜித்” என்று சொல்லி விட்டு, “விஜய்யையும் பிடிக்கும்” என்று கூறினார்.