இலங்கையின் வடக்கே காங்கேசன்துறை கடற்பரப்பில் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான தங்கத்தினை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவற்றை வைத்திருந்ததாக இரண்டு சந்தேக நபர்களையும் மேற்படி கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
காங்கேசன்துறை கடற்பரப்பில் நேற்றைய தினம் சுமார் 5கோடி ரூபா பெறுமதியான 70 தங்க பிஸ்கட்டுகள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என கடற்படைப் பேச்சாளர் அறிவித்தார்.
சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய கப்பலை சோதனையிட்டபோதே இவை கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார். கைதாகிய இரண்டு சந்தேக நபர்களையும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.