அண்மைக் காலமாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் பேட்டரிகள் வெடிப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், ஆப்பிள் விற்பனையகத்திலேயே ஐபோன் பேட்டரி வெடித்த நிகழ்வு தற்போது நடைபெற்றுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஜூரிச்சில் உள்ள ஆப்பிள் ஐபோன் விற்பனையகத்தில் அதிக சூடான ஐபோன் பேட்டரி வெடித்தது, அப்போது அருகில் இருந்த ஊழியர் ஒருவர் காயமடைந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்த தகவலை சுவிஸ் இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு, ஆப்பிள் போனை பழுதுபார்க்கும் ஊழியர் ஒருவர் பேட்டரியை எடுக்கும்போது அது வெடித்தது. இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.இந்த விபத்தால் ஊழியரின் கையில் தீக்காயம் ஏற்பட்டது. அருகிலிருந்த மற்ற 7 ஊழியர்களுக்கு காயமில்லை. வெடித்த பேட்டரி மீது மணலை வீசி அனைத்த காரணத்தினால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில் கடைக்கு வந்திருந்த 50-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் சம்பவ இடத்தில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என கூறப்பட்டுள்ளது.