பேஸ்புக்கில் ஏற்பட்ட நட்பால் கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் 7 இலட்சத்துக்கும் அதிகமான பணத்தை இழந்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருதாவது,
கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஆயுர்வேத பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவி ஒருவரிடம் நபர் ஒருவர் பேஸ்புக் ஊடாக நட்பை ஏற்படுத்தியுள்ளார்.
பின்னர் தான் தரும் வங்கி இலக்கமொன்றுக்கு நான் சொல்லும் பணத்தை வைப்பிலிட்டால் பாரிய பணப் பரிசு ஒன்றை பெற்றுக்கொள்ள முடியும் என குறித்த மாணவியிடம் குறித்த நபர் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய மாணவி, மோசடியாளர் தந்த வங்கி கணக்குக்கு 7 இலட்சத்து 75 ரூபாவை வைப்பிலிட்டுள்ளார்.
பின்னர் மோசடியாளர், குறித்த மாணவியிடம் கடந்த 3 ஆம் திகதி உங்கள் வீட்டுக்கு பணப் பரிசு வரும் என தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார்.
எனினும் 3 ஆம் திகதி முழுவதும் காத்திருந்த மாணவி குறித்த நபர் கூறியவாறு எவ்வித பரிசும் வீட்டுக்கு வரவில்லை.
இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த குறித்த மாணவி, கும்புருபிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சமூக வலைத்தளத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ள மிகப் பெரிய பணமோசடி என தெரிவித்துள்ள பொலிஸார், சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.