செஞ்சுரியன்: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், இரண்டாவது இன்னிங்சை இந்திய அணி சொதப்பலாக துவங்கியது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் தென் ஆப்ரிக்கா வென்றது.
இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடக்கிறது. தென் ஆப்ரிக்க அணி முதல் நாள் முதல் இன்னிங்சில் 335 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தென் ஆப்ரிக்க அணி, இரண்டாவது இன்னிங்சில் 258 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் இந்திய அணிக்கு 287 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சொதப்பல் துவக்கம்:
கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துவக்க வீரர் முரளி விஜய் (9) ரபாடா வேகத்தில் போல்டானார். ராகுல் (4) நிகிதி வேகத்தில் அவுட்டானார். பின் வந்த கேப்டன் கோலியும் (5) நிகிதி வேகத்தில் சிக்க, நான்காவது நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 35 ரன்கள் எடுத்துள்ளது.
இன்னும் இந்திய அணி வெற்றி பெற 252 ரன்கள் தேவைப்படுகிறது. புஜாரா (11), பார்த்தீவ் படேல் (5) அவுட்டாகாமல் உள்ளனர்.