உத்தரபிரதேசம் லக்னோ நகரில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையில் பிச்சை எடுத்து கொண்டிருந்தார்.
அவரிடம் பிரிஜிமோகன் என்ற காவலர் சென்று விசாரித்தார்.
அதில் அவரது பெயர் சிவச்சன். பச்வாரா என்ற பகுதியில் தனது வீடு உள்ளதாகவும் கூறினார்.
குறிப்பிட்ட பகுதியில் சென்று விசாரித்தபோது சிவச்சன் மிகப்பெரிய கோடீஸ்வரர். அவருக்கு அப்பகுதியில் 70 ஏக்கருக்கும் மேல் நிலமும், 6 கடைகளும் சொந்தமாக உள்ளது தெரியவந்தது.
பின்னர் உறவினர்களிடம் சிவச்சனை ஒப்படைத்தார். சிவச்சனுக்கு கடந்த 10 வருடமாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
குறித்து அவரது சகோதரர் ராமன் கூறும்போது,
3 மாதங்களுக்கு முன்பு தசரா விழாவுக்கு சென்றிருந்தபோது திருவிழாவில் தொலைந்து போய் விட்டார். பின்னர் அவரை போலீசார் உதவியுடன் தேடி வந்தோம்.
தற்போது அவர் திரும்ப கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது என்றார். சிவச்சனுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.