மக்களை வியப்படைய செய்த வெளிநாட்டு இளைஞனின் செயல்!

யாழ்ப்பாணம் – மல்லாகம் பகுதியில் புற்றுநோயுடன் உளாவி கொண்டிருந்த நாயிற்கு வெளிநாட்டு கால்நடை மருத்துவர் ஒருவர் நேற்று சிகிச்சை வழங்கியுள்ளார்.

Dog-Fever

அவுஸ்திரேலியாவை சேர்ந்த கால்நடை மருத்துவர் ஒருவரே இந்த செயலை செய்துள்ளார்.

குறித்த மருத்துவர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த நாயை அப்பகுதியில் உள்ள கால்நடை மருத்துவ கூடத்திற்கு கொண்டு சென்று சிகிச்சை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாயின் தோலில் இருந்த புற்றுநோய் பகுதியை சத்திர சிகிச்சை மூலம் மருத்துவர் அகற்றியுள்ளார்.

யாழ்ப்பாணம் அளவெட்டி பிரதேசத்தில் பிறந்து தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் கால்நடை மருத்துவரான சின்னதம்பி கஜேந்திரன் என்பவரே இந்த மனித நேய செயற்பாட்டை மேற்கொண்டுள்ளார்.

இந்த மனித நேய செயற்பாடு தொடர்பில் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.