நடிகை தேவயானிக்கு இன்று காத்திருந்த அதிர்ச்சி!! குடும்பமே பெரும் சோகத்தில் மூழ்கிய தருணம்….

பிரபல நடிகை தேவயானியின் தந்தை இன்று அதிகாலை காலமானார்.

hqdefault

சில வருடங்களுக்கு முன்பு அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கியவர் தேவயானி.

இவரது தம்பியும் நடிகருமான நகுலும் சில படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இவர்களின் தந்தை ஜெய்தேவ் பேட்டர்பெட் 73 வயதாகும் இவர் இன்று அதிகாலை காலமானார்.

தற்போது அவரது உடல் சென்னையில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் 1.30 மணி முதல் 2 மணிக்குள், சென்னை, நெசப்பாக்கம் மயானத்தில் தகனம் அவரது உடல் செய்யப்பட உள்ளது.

குறித்த விடயத்தை அறிந்த நடிகை தேவயானி அதிர்ச்சியடைந்துள்ளதுடன், முழு குடும்பமும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

இதேவேளை, தற்போது திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.