தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயினாக இருப்பவர் தான் அனுஷ்கா. தனது அழகினாலும், நடிப்பினாலும் பல ரசிகர்களை கவர்ந்தவர் ஆவார்.
தற்போது அனுஷ்காவின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளலாம். தெலுங்கில் அறிமுகமான பின்னரே தமிழில் அறிமுகமானார். ஆரம்பத்தில் இவரது சம்பளம் மிகக் குறைவு தானாம்.
அதன் பின்பு சிங்கம் படம் இவருக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. அதன் பின்பு தனது சம்பளத்தினையும் அதிகமாக்கினார் அனுஷ்கா.
அனுஷ்கா இதுவரை 22 மில்லியன் டொலர் சம்பாதித்து வைத்துள்ளாராம். இந்திய மதிப்பில் 144 கோடியாகும்.
இவருக்கு இரண்டு வீடுகளில் ஒரு வீடு பெங்களூரிலும், ஹைத்ராபாத்தில் ஒரு வீடும் இருக்கிறதாம். கார் மீது அதிக நாட்டம் கொண்ட இவர் அதிகமான கார்களை வாங்கி வைத்துள்ளாராம்.
படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடித்து சமீபத்தில் வெளியான பாகுபலி உலகளவில் வெற்றியை தேடித் தந்துள்ளது. இதற்கு இவர் சம்பளமாக பல கோடி வாங்கியுள்ளாராம்….