மருக்கள் முகத்தின் அழகை கெடுக்க கூடியது.. இது முகம், கைகள், இடும்பு பகுதிகள் போன்ற இடங்களில் அதிகமாக வரக்கூடியது.
இதனால் ஆபத்து ஒன்றும் இல்லை என்றாலும் கூட, இது அழகினை கெடுப்பதாக உள்ளது..
ஒரு சிலருக்கு இது மிக அதிகளவில் இருக்கும். இதனை போக்குவதற்கு இரண்டு எழிமையான வழி உண்டு.
விட்டமின் இ
விட்டமின் இ சரும பிரச்சனைகளை போக்குவதற்கு உதவியாக உள்ளது. விட்டமின் இ கேப்சூல்கள் மருந்துக் கடைகளில் எளிதாக கிடைக்கும். இதனை வாங்கி, அதில் துளையிட்டு, அதனுள் உள்ள திரவத்தை மட்டும் வெளியில் எடுத்து அதனை மருக்கள் மீது வைத்தால், சீக்கிரமாக மருக்கள் நீங்கிவிடும்.
வாழைப்பழ தோல்
வாழைப்பழ தோலை வெளியில் எறிந்துவிடாமல், அதனை மருக்கள் உள்ள இடங்களில் போட்டு வைத்தால் மருக்கள் சில நாட்களில் உதிர்ந்து விடுவதை காணலாம்.