-
மேஷம்
மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைதேடி வருவார். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். சிறப்பான நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.
-
மிதுனம்
மிதுனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் பழைய கசப்பான சம்பவங்கள் நினைவுக்கு வரும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.
-
கடகம்
கடகம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
-
சிம்மம்
சிம்மம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சிலர் உங்களிடம் கேட்ட உதவியை செய்வீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.
-
கன்னி
கன்னி: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். நினைத்தது நிறைவேறும் நாள்.
-
துலாம்
துலாம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். புது வேலைக் கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். வெற்றி பெறும் நாள்.
-
தனுசு
தனுசு: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். புதிய பாதை தெரியும் நாள்.
-
மகரம்
மகரம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் பாக்கி வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் வளைந்து கொடுத்து போவது நல்லது. போராட்டமான நாள்.
-
மகரம்
மகரம்: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
-
மீனம்
மீனம்: கனிவாக பேசி காரியம் சாதிப்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர் கொண்டு வெற்றி காண்பீர்கள். உத் யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.