யாழ். வந்த கனடா குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி!!

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

குறித்த நபர் நேற்று முன்தினம் வழமைப்போல இரவு உணவினை எடுத்த பின்னர் நித்திரைக்காக சென்றுள்ளார்.

இந்த நிலையில் மறுதினம் காலை அவருக்கு சுவாச கோளாறு ஏற்பட்டுள்ளதையடுத்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இருப்பினும் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலாவிற்காக கனடாவிலிருந்து வந்திருந்த கொக்குவில் பகுதியைச் சேர்ந்த இராசையா மகாதேவா எனும் 83 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரின் இறப்பு தொடர்பான விசாரணைகளை வைத்தியசாலையின் திடீர் இறப்பு அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.500.560.350.160.300.053.800.900.160.90