இலங்கை நாளை முதல் இருளில் மூழ்கும் அபாயத்தில்!!

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 download (5)

மின்சார சபை தலைமை காரியாலயத்தில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் காரணமாக இவர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இந்த நிலையில் நாளைய தினம் காலை 9 மணி முதல் அகில இலங்கை ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என இலங்கை மின்சார சபை தொழிலாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளது.

மேலும் இன்று, இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சிலர் மின்சார சபையின் தலைவரைத் தடுத்து வைத்து, தலைமையக வளாகத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்ததுடன் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியிருந்தது.

இதன் போது பொலிஸார் தலைவரை பாதுக்கப்பதாக கூறி தம் மீது தாக்குதல் நடத்தியதாக கூறியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

UPDATE :கடந்த 2014 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட சம்பள அதிகரிப்பை சட்டப்பூர்வமாக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே ஊழியர்கள் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த நடவடிக்கையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என ஒன்றிணைந்த மின்சார சபை தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார்.

சம்பள உயர்விற்கு அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி வள அமைச்சு தெரிவித்துள்ளது.

பொறியியல்துறை சார்ந்தவர்களுக்கே சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன சுட்டிக்காட்டினார்.