உடற்கூறு மற்றும் அறிவியல் பூர்வமான உண்மையை பெண்கள் சந்தனம் மற்றும் குங்குமம் நெற்றியில் இடுவதற்கான காரணங்கள் அறியப்பட்டுள்ளது.
சந்தனம் குளிர்ச்சி தரக்கூடிய பொருளாகும். குங்குமம் இயற்கை கிருமி நாசினியாக செயல்படுத்தும் தன்மை உள்ளது. இதனால் நெற்றி மற்றும் புருவ மத்தியில் பூசுவதால் உடற்கூறு இயல் காரணிகள் இருப்பதாக கூறுகின்றனர்.
- நம் நெற்றி பகுதியில் ‘பிட்யூட்டரி சுரப்பி’ சந்தனம் மற்றும் குங்குமம் வைக்கும் போது குளிர்ச்சியடைகிறது. இதனால் உடலின் மையத்தை கட்டுப்படுத்தும் மூளையின் பின்பகுதியில் ‘ஹிப்போகேம்பஸ்’என்ற இடத்திற்கு ஞாபக சக்தி பதிவாகும் தூண்டுதல்களை சிறப்பாக இயக்க உதவுகிறது.
- நெற்றி மற்றும் புருவமத்தி மின்காந்த அலைகளை வெளியிடுவதில் முக்கியமானவை. அதனால்தான், நம் மனம் கவலையால் வாடும்போது, தலைவலி அதிகமாவதை உணர்கிறோம். நெற்றியில் இடும் திலகம், அந்தப் பகுதியைக் குளிர்விக்கிறது.
- சிந்தனை நரம்புகள் ஒன்றாக கூடும் இடமாக இருக்கும் நெற்றியில் மெதுவாக விரலால் தொடும் போது மனதில் மெல்லிய உணர்வு ஏற்படும். மன ஒருமை மற்றும் சிந்தனை தெளிவு போன்ற நிலைக்கு கொண்டுச்செல்லும்.
- பெண்கள் நடு நெற்றி மற்றும் புருவமத்தியில் குங்குமத்தை இடுவதும், ஆண்கள் புருவ மத்தியில் அணிவதும் வழக்கம். குங்குமத்தில் மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு போன்றவற்றை கலந்து இடுவதால் கிருமி நாசினியாக செயல்படும்.
- குங்குமத்தை வைப்பதால் ஹிப்னாட்டிஸம் போன்ற எதிர்மறை சக்திகள் செயல்படுவதில்லை என்றும் சொல்லப்படுகிறது.
- பெண்கள் தங்களது முன் வகிட்டில் குங்குமம் இடுவதன் மூலம் மங்களம் ஏற்படுவதாகவும், அவர்களது கர்ப்பப்பை சம்பந்தமான இயக்கங்கள் சரியாக அமைவதாகவும் முன்னோர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.