10 கோடி ரூபாய் வேண்டுமா? வைரமுத்து நாக்கை அறுங்கள்! பரபரப்பை கிளப்பிய பேச்சு

வைரமுத்துவின் நாக்கை அறுத்தால் ரூ.10 கோடி தரவும் தொண்டர்கள் தயாராக உள்ளனர் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசி உள்ளார்.

1481085909-7862

இந்துக்கள் கடவுளாக வழிபடும், ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து தவறுதலான கருத்து தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வலியுறுத்தியும் இந்துக்கள் தரப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நெல்லையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது :

இந்து கடவுளை கொச்சைப்படுத்திய வைரமுத்துவின் நாக்கை அறுத்தால் ரூ.10 கோடி தரவும் தொண்டர்கள் தயாராக உள்ளனர். வருங்காலங்களில் இந்துக்களை பழித்து பேசினால் கொலைசெய்யவும் தயாராகுங்கள்” என பேசி உள்ளார். இது பெரும் சர்ச்சையாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.