சசிகலா குடும்பத்தில் ஆள் ஆளுக்கு பேட்டி கொடுப்பதால் குழப்பம்!

சென்னை: சசிகலா குடும்பத்தில் ஆள் ஆளுக்கு பேட்டி கொடுப்பதால் பெரும் குழப்பம் ஏற்படுகிறது என தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் சாடியுள்ளார். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது வீடியோ எடுக்கப்பட்டது என பரபரப்பை கிளப்பினார் திவாகரன் மகன் ஜெயானந்த். இந்த வீடியோக்களில் ஒன்றை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டு அதிர வைத்தார்.

18-1516244504-krishnapriya345கிருஷ்ணப்பிரியா

ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்டதற்காக தினகரன், வெற்றிவேலை இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா விமர்சித்தார். இதனால் கிருஷ்ணப்பிரியாவை கன்னத்தில் அறைவேன் என சசிகலா கணவர் நடராஜன் கூறினார்.

18-1516244532-divakarani99

திவாகரன் திடுக்

நடராஜன் என்னை அறைந்து பார்க்கட்டும் என சவால்விட்டார் கிருஷ்ணப்பிரியா. இந்த நிலையில் ஜெயலலிதா டிசம்பர் 4-ந்தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் அதிர வைத்தார்.

18-1516244540-divakaran99556

தினகரன் தரப்பு எதிர்ப்பு

பின்னர் தமது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது எனவும் திவாகரன் விளக்கம் கொடுத்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன், சசிகலா குடும்பத்தில் ஆள் ஆளுக்கு பேட்டி கொடுப்பதால் குழப்பம் ஏற்படுகிறது.

18-1516244549-thanga-tamil-selvan56

தினகரனுக்கு இடையூறு

சசிகலாவால் துணை பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட தினகரன் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். இதனை குழப்பும் விதமாக கருத்துகளை தெரிவிக்கக் கூடாது; திவாகரனின் பேச்சு தேவையில்லாத ஒன்று என சாடியுள்ளார்.