ஜியோவின் புயலில் சிக்கிய இதர இந்தியா தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அனைத்துமே, புதிய சந்தாதாரர்களை ஈர்க்கும் நோக்கத்தையெல்லாம் கைவிட்டு பல மாதங்கள் ஆகின்றன. ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர்களை எபப்டியாவது தக்கவைத்தால் போதுமென்ற முடியில் அதுசார்ந்த முயற்சிகளையே அதிகம் கையாளுகின்றன. அப்படியானதொரு நிறுவனம் தான் – வோடாபோன் இந்தியா.!
ஜியோ பாணியிலான கவர்ச்சிகரமான கட்டணத் திட்டங்களை வழங்குமொரு புதிய முயற்சியின் கீழ், வோடாபோன் இந்தியா நிறுவனம் அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரங்களில் சில புதிய கட்டண திட்டங்களை கொண்டு வந்துள்ளது. சுவாரசியம் என்னவெனில் அதன் நன்மைகள், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் புதிய கட்டணத் திட்டங்களுடன் ஒற்றுப்போகின்றன.
ரூ.459, ரூ.409 மற்றும் ரூ.349
அறிவிக்கப்பட்டுள்ள வோடாபோனின் ரூ.459, ரூ.409 மற்றும் ரூ.349/- ஆகிய ரீசார்ஜ்கள், நிறுவனத்தின் வலைத்தளத்தின்படி தெலுங்கானா, பீகார், ஜார்கண்ட், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய வட்டங்களில்கிடைக்கும. இதன் நன்மைகளை பொறுத்தமட்டில்..
ரூ.459
வோடபோன் ரூ.459/- என்கிற கட்டணத் திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்புகளுடன் வரம்பற்ற தரவு நன்மையையும் வழங்குகிறது (வரம்பு குறிப்பிடப்படவில்லை) மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய அனைத்தையும் மொத்தம் 91 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது.
முறையே 84 நாட்கள் மற்றும் 70 நாட்கள்
மற்ற இரண்டு திட்டங்களான – ரூ 409/- மற்றும் ரூ.349/- ஆகிய திட்டங்களும் அதே நன்மைகளை (வரம்பற்ற குரல் அழைப்பு, வரம்பற்ற தரவு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்) கொடுக்கின்றன, ஆனால் திட்டங்களின் செல்லுபடியாகும் காலம் முறையே 84 நாட்கள் மற்றும் 70 நாட்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
3ஜி அல்லது 4ஜி டேட்டா.?
முன்னர் குறிப்பிட்டுள்ளபடி, இந்த திட்டங்களின் தினசரி வரம்பு பற்றிய எந்த தகவலையும் நிறுவனம் குறிப்பிடவில்லை. இந்த திட்டங்களின் கீழ் 3ஜி அல்லது 4ஜி டேட்டா இல்லாமல் 2ஜி தரவு தான் கிடைக்குமென்றும் நாங்கள் கருதுகிறோம்.
தினசரி வரம்பு
இமாச்சல பிரதேசம் வட்டத்தில் இதே ரூ.459/- திட்டம் ஏற்கனவே கிடைக்கிறது. அது 91 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வரம்பற்ற 2ஜி தரவை வழங்குவதாக தெளிவாக குறிப்பிடுகிறது. நிறுவனத்தின் 2ஜி சேவைக்கு எந்த வரம்பும் இல்ல என்பதால் தான் தினசரி வரம்பு பற்றிய எந்த வார்த்தையும் குறிப்பிடப்படவில்லை.
91 நாட்களுக்கு செல்லுபடி
மும்பை, சென்னை போன்ற பிற வட்டாரங்களிலும் வோடபோன் நிறுவனத்தின் இதே போன்ற நன்மைகள் கொண்ட சில திட்டங்கள் கிடைக்கின்றன. குறிப்பாக ரூ.509/- ஆனது ஒரு நாளைக்கு 1ஜிபி அளவிலான 3ஜி/4ஜி தரவு, வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை மொத்தம் 91 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது.
70 நாட்களுக்கு செல்லுபடி
வோடாபோனின் ரூ.459/- திட்டமானது 84 நாட்களுக்கு மேற்குறிப்பிட்ட அதே நன்மைகள் அளிக்கிறது. வோடாபோனின் ரூ.399/- திட்டமானதும் அதே நன்மைகளை மொத்தம் 70 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது. வோடபோன் ரூ.357/- ஆனது நாள் ஒன்றுக்கு 2ஜிபி தரவு மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகளை மொத்தம் 28 நாட்களுக்கு வழங்குகிறது.
உறுதி
கூறப்படும் வோடபோனின் குரல் அழைப்புகளுக்கு நாள் ஒன்றுக்கு 250 நிமிடங்கள் மற்றும் வாரத்திற்கு 1000 நிமிடங்கள் வரம்பிடப்பட்டுள்ளதை கவனிக்க வேண்டும். இம்மாத இறுதிக்குள் வோடபோன் பல முக்கிய வட்டாரங்களில் அதன் வோல்ட் சேவையின் தொடக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
ஏப்ரல் மாதத்தோடு நிறைவு
வோல்ட் சேவை உருட்டப்பட்ட பின்னர் எந்த தினசரி மற்றும் வார வரம்பும் இல்லாமல் வோடாபோன் நிறுவனத்தின் குரல் அழைப்புகள் வழங்கப்படலாம். மேலும், ஐடியா செல்லுலார் உடனான வோடபோன் இந்தியாவின் இணைப்பானது, வருகிற 2018 ஏப்ரல் மாதத்தோடு நிறைவு செய்யப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.