ஷாப்பிங் செல்ல மறுத்த கணவன்: விபரீத முடிவு எடுத்த மனைவி!!

இந்தியாவில் ஷாப்பிங் அழைத்து செல்ல கணவர் மறுத்ததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னோவில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. தீபக் திவேதி என்பவர் மாநில தலைமை செயலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு தீபிகா (23) என்ற பெண்ணுடன் ஒரு ஆண்டுக்கு முன்னர் திருமணம் ஆனது.

சிறிய விடயத்துக்கு எல்லாம் அடிக்கடி கணவனை கோபித்து கொள்ளும் தீபிகா கோபத்தில் தனது அறைக்குள் சென்று பூட்டி கொள்வது வழக்கமாகும்.

இந்நிலையில் தீபிகாவின் உறவினருக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. இதையடுத்து சில பொருட்கள் வாங்க நினைத்த தீபிகா சனிக்கிழமை தன்னை ஷாப்பிங் அழைத்து செல்லுமாறு தீபக்கிடம் கூறியுள்ளார்.

625.0.560.320.160.700.053.800.668.160.90

ஆனால் தனது அலுவலகத்தில் அதிக வேலை உள்ளதாக கூறிய தீபக் ஞாயிறு அழைத்து செல்வதாக கூறி அலுவலகத்துக்கு சென்று விட்டார்.

பின்னர் மாலை தீபக் வீட்டுக்கு வந்த வந்த போது அவர் மீது போபத்தில் இருந்த தீபிகா தனது அறைக்குள் சென்று பூட்டி கொண்டுள்ளார்.

இரவு முழுவதும் அறை கதவை திறக்காததால், தீபக் வீட்டு ஹாலிலேயே படுத்து தூங்கியுள்ளார்.

காலை எழுந்தும் தீபிகா கதவை திறக்காததால் சந்தேகமடைந்த தீபக் கதவை உடைத்து பார்த்த போது மின்விசிறியில் தீபிகா சடலமாக தொங்கியுள்ளார்.

பின்னர் இது குறித்து பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் நடந்த அனைத்து விடயங்களையும் தீபக் பொலிசில் கூறியுள்ளார்.

இதையடுத்து தீபிகா சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுவரை தீபிகா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவர் குடும்பத்தார் புகார் எதுவும் கூறவில்லை.

625.0.560.320.160.700.053.800.668.160.90 (1)