இவரை கண்டால் உடன் தெரியப்படுத்துங்கள்!

தனது கணவனையும் மூன்று குழந்தைகளையும் தவிக்க விட்டு தலைமறைவான பெண் குறித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.தனது மனைவியை கடந்த திங்கட்கிழமை முதல் காணவில்லை எனத் தெரிவித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் நபர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.இதன் காரணமாக தனது 6 வயதுடைய மகனை பாடசாலைக்கு சேர்ப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், தனது மனைவியை கண்டுபிடித்துத்தருமாறு அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.வவுனியா தோணிக்கல் பார்க்குழி வீதியைச் சேர்ந்த குமாரையா ரஞ்சனி என்ற 40 வயதுடைய பெண் ஒருவரே கடந்த திங்கட்கிழமை முதல் காணாமல் போயுள்ளார்.அவர் மோட்டார் சைக்கிளுடன் காணாமல் போயுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைப்பாட்டிற்கு அமைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.