யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து நடத்துனர் மீது மர்மநபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து நடத்துனர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சாவகச்சேரியில் வைத்து சற்றுமுன்னர் பேருந்தினை இடைமறித்த சிலர் நடத்துனர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தின் நடத்துனரே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிப்பபடுகின்றது.