லாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காக எங்களை பயன்படுத்தாதீர்கள்..கதறி அழும் பிரபல நடிகை

சினிமா என்பது மக்களுக்கு ஒரு சந்தோஷமான விஷயம். ஆனால் அதற்காக உழைக்கும் நடிகர்கள், நடிகைகள் எப்படிபட்ட கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்பது நமக்கு தெரிவதில்லை.

IMG_20180117_212530

இந்த நிலையில் பிரபல சீரியல் நாயகி ஒரு வீடியோ மூலம் தான் அனுபவித்த கஷ்டங்களை பற்றி கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

அதில், தொலைக்காட்சிகள் TRPக்காக திறமையான பழைய நடிகைகளை விட்டுவிட்டு புதுமுகங்களை கொண்டு வருகிறார்கள். பழைய நடிகைகள் என்றாலே ஒதுக்குகிறார்கள்.. TRP என்று அலையாதீர்கள் உங்களுக்கு லாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காக எங்களை பயன்படுத்தாதீர்கள்.

ஆடை குறைத்தால் மட்டும் வாய்ப்பு தருவீர்கள் என்றால் எங்கள் வாழ்க்கை நாசமாக போகலாமா.? இந்த பிரச்சனைக்கு முடிவு நாங்கள் தற்கொலை செய்து கொண்டால் தான் தீருமா? என்று கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

திறமையான நடிகையும், நடன மங்கையுமாகிய இவர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.