தமிழ் நாட்டு ஆண்களிடம் தங்களுக்கு பிடித்த மற்றும் பிடிக்காத விஷயங்களை பற்றி வட இந்திய பெண்கள் என்ன சொல்கிறார்கள் என்று இந்த பகுதியில் பார்க்கலாம் வாங்க.. தமிழ் நாட்டு ஆண்கள் தங்கள் குடும்பம் மற்றும் தங்களது உறவுகளுடன் அதிக பிணைப்புடன் இருப்பார்கள். அனைவரையும் உடன்பிறந்தவர் போல பார்க்கும் தமிழர்களின் குணம் பிடிக்கும்.
தமிழ் நாட்டு ஆண்கள் காதலியை காட்டிலும், நண்பர்களுடன் அதிக நேரம் செலவழிப்பார்கள். அது மட்டும் இல்லாமல்., நண்பர்களுக்காக காதலியையும் பிரியும் துணிச்சல் உள்ளவர்கள். இது எங்களுக்கு பிடிக்காது.
தமிழ் நாட்டு ஆண்கள் பண்பாக பழக கூடியவர்கள். இந்த குணம் தமிழக ஆண்களிடம் பிடிக்கும். அதுமட்டும் இல்லாமல்., தமிழ் நாட்டு ஆண்கள் பழைய காதல் உறவில் இருந்து எளிதாக வெளிவர மாட்டார்கள். ஆனால், வட இந்திய ஆண்கள் இதில் விவரமானவர்கள். வட இந்திய ஆண்களுடன் ஒப்பிடுகையில், தமிழக ஆண்கள் வயதானதை போன்ற தோற்றம் உடையவர்கள்.
அதுமட்டும் இல்லாமல்., அவர்கள் ஃபேஷனுக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். இதெல்லாம் எங்களுக்கு பிடிக்காது என்று வட இந்திய பெண்கள் கூறுகின்றனர். இதை எல்லாம் விட., தமிழர்கள் வீரமாகவும்., கம்பீரமாகவும் கருதும் மீசை வட இந்திய பெண்களுக்கு பிடிக்காதாம்.
டென்ஷன் ஆகாதீங்க.., நமக்கு மீசைதான் முக்கியம்.. மற்றதெல்லாம் அப்புறம்தான் பாஸ்.