கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் சொத்து தகராறில் 14 வயது மகனை எரித்துக் கொன்ற தாயாரை போலீசார் கைது செய்தனர்.
கேரளா கொல்லம் மாவட்டம் குண்டாரா பகுதியை சேர்ந்த ஜித்து என்ற 14 வயது சிறுவன் கடந்த 14ம் திகதியிலிருந்து காணவில்லை. இதை சிறுவனின் தந்தை போலிசாரிடம் புகார் அளித்ததன் பேரில் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் வீட்டின் அருகே கரிக்கட்டையாக எரிந்த நிலையில் பிணமாக சிறுவன் இருப்பதை போலிசார் கண்டறிந்தனர். இதுதொடர்பாக 44 வயதான சிறுவனின் தாய் ஜெயாமோளிடம் விசாரணை நடத்திய போலிசார், அவரது பேச்சில் முரணான பதில் இருப்பதை சந்தேகப்பட்டனர்.
மேலும் அப்பெண்ணின் கையில் தீக்காயம் இருந்ததால் விசாரணையை தீவிரப்படுத்தினர். வாக்குமூலத்தில் அவர் கூறியது, கணவரின் குடும்பத்தாருக்கு சொத்துக்கள் தொடர்பாக தனக்கும் மகன் ஜித்துவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதனால் கோபத்தில் மகனை உயிருடம் எரித்து கொன்றதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து ஜெயாமோளை கைதுசெய்த போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.