கோபிநாத் என்றால் மக்கள் அனைவருக்கும் நினைவு வருவது நீயா நானா நிகழ்ச்சி தான். பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சிக்கு முன்னனி தொகுப்பாளராக இருக்கிறார்.
தொகுப்பாளர் மட்டுமின்றி சில படங்களில் சிறப்பு கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இவருடைய மனைவி துர்கா.
இவரைப் பற்றி தெரிந்து கொண்ட அளவிற்கு இவருடைய மனைவியைப் பற்றி பெரும்பாலும் யாரும் தெரிந்து கொண்டதில்லை.
கணவர் என்னதான் பிரபல ரிவியல் தொகுப்பாளராக இருந்து லட்சக்கணக்கில் சம்பாதித்தாலும் தான் வீட்டில் சும்மா இருக்கக்கூடாது என்று நினைப்பவர் தான் துர்கா.
அசோக் பில்லர் அருகே கோபிநாத்தின் ஆபீஸ் அமைந்துள்ள இடத்திலேயே ஒரு எம்போரியம் வைத்து நடத்தி வருகிறார். இங்கு பெண்களுக்காக பிரத்யேகமாக ஆடைகளை தைத்துக் கொடுக்கிறார்களாம். பிரபலங்கள் சிலரும் இந்த எம்போரியத்துக்கு வாடிக்கையாளர்களாக உள்ளனராம்.