இந்தியாவில் இருக்கும் பெண்களை தாக்கும் புற்றுநோயில் இரண்டாம் இடத்தில் இருப்பது கர்ப்பபை புற்றுநோய்..
இந்த நோயினால் ஒவ்வொரு வருடமும் இந்திய பெண்கள் 67,477பேர் இறக்கிறார்களென்று இந்திய சுகாதாரத்துறை அறிக்கை சொல்லுகிறது.
இதுகுறித்து ஆய்வு மேற்க்கொண்ட இந்திய சுகாதாரத்துறை இதற்கான காரணத்தை இதற்கான தீர்வையும் முன்மொழிந்தது. அதாவது,
இந்த புற்றுநோய் வராமல் தடுக்கும் தடுப்பூசி என்பது இந்தியாவிலேயே இரண்டு தனியாரிடம் தான் இருக்கிறது.
இவர்கள் இந்த தடுப்பூசியை ஒரு டோஸ் 3000 ரூபாய்க்கு விற்கிறார்கள்.மொத்தம் 3 டோஸ்கள் போடவேண்டும் அப்படியென்றால் 9000ரூபாய் செலவாகிறது.
இவ்வளவு செலவு செய்வது ஏழை பெண்களுக்கு முடியாத காரணத்தால் இதனை போடாமல் இருக்கிறார்கள். இதுவே இந்த புற்றுநோய் வருவதற்கு முதல் காரணமென்றும்.
இதனை நீக்கவேண்டுமானால் அரசே இந்த தடுப்பூசியை போடவேண்டும் அல்லது இதற்கு ஆகும் செலவை குறைக்கும் வழியை அரசு தேடவேண்டும் இதுவே இப்போது நடக்கும் இந்த உயிரழப்பை தடுக்கும் ஒரேவழி என்று அது சொன்னது.
எங்கேயோ இருந்து ஒரு கடிதம், இந்த தடுப்பூசிக்கு மாற்றை அறிமுகப்படுத்தும் செயலை உடனே நிறுத்தவேண்டுமென்று சொல்லியது.
இப்படியே சென்றால்..? இந்தியாவில் கர்ப்பபை புற்றுநோயால் சாகும் பெண்களின் எண்ணிக்கை இன்னும் உயரும்.
கார்ப்பரேட்டுகளின் இடையே மாட்டிகொண்ட இந்த சமூகத்தில், தற்போது பெண்கள் தான் அதிகமாக பாதிக்கபட உள்ளார்கள்..
ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் என்பதே அல்லல் படும் ஒன்றாக இருக்கும் போது, 9000ரூபாய் செலவில் ஊசி எப்படி சாத்தியமாகும்..?