கேரளாவில் ஆயுத கிடங்கு அமைக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் ஏர்வாடியில் அனுமதி அளிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவியது தற்போது உறுதியாகி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே 500 ஏக்கர் நிலப்பரப்பில் கடற்படை ஆயுதக் கிடங்கு அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனை கடற்படை ஆயுதக் கிடங்கு பொது மேலாளர் புனித் உறுதிப்படுத்தி இருப்பதாக ஒரு தமிழ் ஊடகம் தகவல் வெளியிட்டு உள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அரசிடம் இருந்து இதுவரை பதில் கிடைக்கப்பட வில்லை என்றும் கூறியுள்ளார்.
ஆயுதக் கிடங்கு அமையும் பட்சத்தில் அதன் அருகில் இருக்கக்கூடிய எந்த கட்டிடத்தையும் புதுப்பிக்க முடியாது என்பதும் சுற்று வட்டாரத்தில் புதிய கட்டிடம் கட்டவும் அனுமதிக்கப்பட மாட்டாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கேரள மாநிலம் ஆளுவாவை தவிர, விசாகப்பட்டினம், கோவா , மும்பை மற்றும் ஒரிஸாவிலும் கடற்படையின் ஆயுத கிடங்கு இருக்கிறது.
இது தமிழகத்தில் அமைக்கப்பட்டுவிட்டால் ஆயிரம் ஏக்கருக்கு பொதுமக்கள் போக முடியாது.
கடுமையான பாதுகாப்பு சோதனைகள் வரும்; போர் வந்தால் முதலில் பாதிப்புக்கு உள்ளாவது ஆயுத கிடங்காக தான் இருக்கும்.