இலங்கையின் பல பகுதிகளிலும் இரவு மற்றும் காலை வேளைகளில் உலர் வானிலையுடன், குளிரான காலநிலையும் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், எதிர்வரும் இரு நாட்களுக்கு நுவரெலியாவில் உறைபனி பொழியும் சாத்தியம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை வடக்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை, அம்பாறை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் ஓரளவு பலத்த திடீரென வீசும் வாய்ப்புள்ளதாகவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அத்துடன், அதிகமான மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பிறகு இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்பதுடன், மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வட மத்திய மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் பனி நிலைமை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.