ஜெயலலிதா இறப்பு குறித்து அவருடன் இருந்த சசிகலாவுக்குத்தான் அனைத்து உண்மைகளும் தெரியும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதியே இறந்து விட்டதாகவும், மருத்துவமனைகளின் பாதுகாப்பை உறுதி செய்த பின்பே மருத்துவமனை நிர்வாகம் ஜெயலலிதாவின் இறப்பு செய்தியை வெளியிட்டதாகவும் சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்திருந்தார்.
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கருதி நிலவி வந்த நிலையில் திவாகரனின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில்,
ஜெயலலிதா சிகிச்சையின் போது உடன் இருந்த சசிகலாவுக்குத் தான் அனைத்து உண்மைகளும் தெரியும்.
ஜெயலலிதா மரணம் குறித்து திவாகரன் அநாகரிகமாக பேசி வருகிறார்.
ரஜினி அரசியலுக்கு வந்தால்தான் அதனுடைய சூழல் பற்றி தெரியவரும்.
54 ஆண்டுகளாக அரசியலில் உள்ளேன், 5 வருடம் சிறையில் இருந்துள்ளேன் என்றார் வைகோ.