மன்னார் கடற்பரப்பில் வைத்து தமிழ மீனவர்கள் மூவரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களிடம் இருந்து ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான 480 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சுமார் 1000 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் அண்மையில் பொது மக்கள் முன்னிலையில் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.