தினகரனுக்கு ஆதரவு கிடையாது: – தங்கத்தமிழ் செல்வன்

தினகரன் தனிக்கட்சி தொடங்கினால், அவர் கட்சியில் சேரமாட்டேன் என்று தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆரின் பிறந்தநாளான ஜனவரி 17 ஆம் தேதி தனிக்கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடப்போவதாக தினகரன் தெரிவித்திருந்தார். தினகரனின் இந்த தன்னிச்சையான முடிவால், தினகரன் ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதன்பின், தினகரன் தனது தனிக்கட்சி பற்றிய முடிவை கைவிட்டார்.

இந்நிலையில், தினகரன் தனிக்கட்சி தொடங்கினால் அதில் சேரமாட்டேன் என்று தினகரன் ஆதரவாளரான தங்கத்தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார். மேலும், அதிமுகவின் உறுப்பினராகவே இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Tamil_News_large_1843925