யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை, வடமேற்கு பத்திரகாளி அம்மன் கோவில் வீதியில் குடும்பம் ஒன்றில் ஏற்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில் மூன்று வயது குழந்தை உயிரிழந்ததுடன் கொலையாளி தானும் நஞ்சருத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேலும் தாய் ஒருவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதில் தாக்குதலை மேற்கொண்டு நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டவர் 33 வயதான ஈஸ்வர் என்று தெரியவந்துள்ளது.
மேலும், 3 வயதாகிய தனுசன் நிக்சையா என்ற குழந்தை உயிரிழந்துள்ளதுடன், 55 வயதுடைய பலமேஷ்வரி என்பவர் படுகாயமடைந்துள்ளார்.
உயிரிழந்த நபர் குறித்த தாயின் மூத்த மகனாவார். இவர் தனது மகள் முறையான இளைய சகோதரனின் மகளையும் தாயையும் கொடூரமாக வெட்டியுள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட நபரின் தாயும், அவருடைய சகோதரனின் 3 வயது மகளும் வண்ணார்பண்ணை, வடமேற்கு பத்திரகாளி அம்மன் கோவில் வீதியில் உள்ள வீட்டில் தனிமையில் இருந்துள்ளனர்.
அப்போது குறித்த நபர் அங்கு சென்று, வீட்டில் இருந்த தாய் மற்றும் குழந்தை மீது கொடூரமாக கோடரியால் வெட்டி தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்துள்ளதுடன், தாயார், கழுத்து மற்றும் தலையில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த கொலையாளியான ஈஸ்வர், நஞ்சை உட்கொண்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்துக்கான காரணம் வெளிவராத நிலையில், யாழ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.