பசு நம் தாய்க்கு ஒப்பானது. தன்னை வருத்தி தம் குழந்தையை ஒரு தாய் காப்பது போல பசு தமது கன்றுக்காக கொடுக்க வேண்டியது பாலை நமக்கு அளித்து நம்மை காப்பாற்றும் ஒரு சாதுவான ஜீவன்..!
ஈறேழு பதினான்கு உலகங்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும் பசுவின் உடலில் வாசம் செய்கின்றனர் என்று புராணம் கூறுகிறது.
எனவே நம்மால் இயன்ற வரையில் பசுவிற்கு நாம் பாதுகாப்பு செய்ய வேண்டியது அவசியமாகும். பசுவிற்கு அருகம்புல், அகத்திக்கீரை, வாழைப்பழம், அரிசி கலந்த வெல்லம் இவற்றில் ஏதாவது ஒன்றை பசுவின் வாய் அளவாவது கொடுக்க வேண்டியது அவசியமாகும்.
பயன்கள்
01-அருகம்புல்
அருகம்புல் கொடுத்தால் பயம் அலலும்.
02-அகத்திக்கீரை
அகத்திக்கீரை கொடுத்தால் சரிவர பிதுர்கடன் செய்யாத தோஷங்கள் அகலும்.
03-வாழைப்பழம் அல்லது அரிசி கலந்த வெல்லம்
வாழைப்பழம் அல்லது அரிசி கலந்த வெல்லம் கொடுத்தால் நம்மை பிடித்த தரித்திரம் நீங்கி லஷ்மி கடாஷம் கிடைக்கும்.