மொபைல் தண்ணீரில் விழுந்துவிட்டதா? கவலையை விடுங்கள் இப்படி செய்யுங்கள்…

எதிர்பாரத விதமாக உங்கள் செல்போன் தண்ணீரில் விழுந்துவிட்டால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் கடைகளில் கொடுத்துவிட்டால் அதற்கு அதிக செலவு ஏற்படும். ஆனல் இனியும் உடனடியாக கடைகளுக்கு எடுத்துசெல்லாமல் வீட்டிலேயே இப்படி செய்து பாருங்கள்..

A-new-iPhone-7-Plus

உங்கள் மொபைல் போன் தண்ணீரில் விழுந்துவிட்டல் உடனடியாக மொபைலை நீரில் இருந்து வெளியே எடுத்து ஆஃப் செய்யவும். மொபைல் ஆனிலேயே இருந்தால் ஷார்ட் சர்க்யூடாக வாய்ப்புள்ளது. மேலும் பல நேரங்களில் பொமைல்கள் தானாகவே ஆஃப் ஆகிவிடும் இதனால் பயப்படவேண்டாம்.

ஸ்டிக்கர்

பொதுவாக சாம்சங் போன்ற மொபைல்களில் வாட்டர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். பேட்டரி முனை அல்லது அதன் கீழ்பகுதியில் வெண்ணிறத்தில் இந்த ஸ்டிக்கர் இருக்கும். நீரில் மூழ்கும்போது இதன் நிறம் சிவப்பாக மாறும் தன்மை கொண்டது. உங்கள் மொபைலின் உள்ளே நீர் இறங்கியிருக்கிறதா என்பதனை இதை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.

துடைக்கவும்

மொபைல் ஆஃப் செய்ததும் மேலே உள்ள மொபல் கவர், பேட்டரி, சிம், மெமரி கார்டு என அத்தனை பாகங்களையும் கழற்றி சுத்தமான காட்டன் துணியால் அனைத்துப் பாகங்களையும் ஈரம் போகும் அளவு சுத்தம் செய்யுங்கள்.

குலுக்க வேண்டாம்

மொபைலில் உள்ள நீரை வெளியேற்றுவதற்காக எக்காரணம் கொண்டும் மொபலை வேகமாக குலுக்க வேண்டாம். இதனால் உள்பக்கமாக மேலும் நீர் இறங்கவே அதிகம் வாய்ப்பிருக்கிறது. நீரை உறிஞ்சியக்கூடிய காட்டம் துணியால் சுத்தம் செய்வதே சிறந்தது.

பின் மொபைலின் ஈரப்பதம் குறைய காற்றோட்டமான அல்லது வெயில் இருக்கும் இடத்தில் தனிதனியாக அத்தனை பாகங்களையும் உலர வைக்கவும். ஹேர் ட்ரையர் போன்ற சாதனங்களை பயன்படுத்தாதீர்கள்.

 

இவ்வளவு செய்முறைகளுக்குப் பின்னும் மொபைஇன் உள்பகுதியில் ஈரப்பதம் இருக்க வாய்ப்பு அதிகம். இதற்கு நம் முன்னோர்கள் பின்பற்றிய வழி ஒன்றிருக்கிறது. பெரிய பாத்திரத்தில் அரிசியை நிரப்பி அதன் உள்ளே மொபைலை வைத்து இறுக மூடிவிடுங்கள். சில மணி நேரங்களுக்கு பின் அரிசி மொபைலில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும்.

இதன் பிறகு பாகங்களை நன்கு துடைத்துவிட்டு ஆன் செய்து பாருங்கள். மொபைல் ஆன் ஆகிவிட்டால் சக்சஸ் இல்லையென்றால் உடனடியாக சர்வீஸ் செண்டருக்கு எடுத்துச் செல்லுங்கள்.