அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்தவ பெண்ணொருவர் தனது காதலனை தமிழ்க் கலாச்சாரப்படி கைப்பிடித்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.இவர்களது திருமணம் நேற்றைய தினம் மதுரையில் வைத்து இடம்பெற்றுள்ளது.அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் வசித்து வந்த காரைக்குடியைச் சேர்ந்த வைத்தியர் சிவக்குமாரும், பாஸ்டன் நகரை சேர்ந்த எலிசபெத் ஆனும் காதலித்து வந்துள்ளனர்.பள்ளிக்காலத்திலிருந்து காதலித்து வந்த இவர்கள் கல்வியை முடித்தவுடன் இரு வீட்டாரினதும் சம்மதத்துடன் திருமணத்திற்கு ஆயத்தமாகியுள்ளனர்.
எனினும், மணமகள் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். மணமகன் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால் இருவரும் ஆலோசித்து தமிழ்க் கலாச்சாரப்படி திருமணம் செய்ய தீர்மானத்துள்ளனர்.இதனையடுத்து, மதுரைக்கு வந்த காதல் ஜோடி நேற்றைய தினம் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டுள்ளதுடன், தமிழ் முறைப்படி சடங்கு சம்பிரதாயங்களையும் செய்துள்ளனர்.மேலும், இவர்களின் திருமணத்திற்காக அமெரிக்காவிலிருந்து மணமகளின் உறவினர்கள் 12 பேர் அமெரிக்காவில் இருந்து மதுரைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.