11ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட நந்தி சிலையைக் கண்டு வியந்த உயர்ஸ்தானிகர்!

திருகோணமலையில் திருக்கோனேஸ்வரம் கோவிலில் 11ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட நந்தியின் சிலையைக் கண்டு கனடாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் மற்றும் மாலைதீவுக்கான தூதுவராக டேவிட் மக்கினொன் (David McKinnon) வியந்துபோயுள்ளார்.

இந்த சிலை குறித்து David McKinnon தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

“திருகோணமலையின் திருக்கோனேஸ்வரம் கோவிலில், 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அழகிய நந்தி காணப்பட்டது.

இந்த அற்புதமான கோவில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டிருக்கும் என்று கருதப்படுகிறது.” என பதிவிட்டுள்ளார்.

s