விரோத செயல்களில் ஈடுபட்டிருந்த மாணவர்கள்!

கிளிநொச்சி – சாந்திபுரம் பிரதேசத்தில் 11 பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலைக்கு செல்லாது மதுபானம் அருந்தியமை உட்பட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டிருந்த நிலையில் 11 பேரும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

625.500.560.350.160.300.053.800.900.160.90கைது செய்யப்பட்ட 11 மாணவர்களும் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிபதி முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட நீதிபதி சிவபாலா சுப்ரமணியம் மாணவர்களின் பெற்றோரை நீதிமன்றத்திற்கு வரவழைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து 11 மணாவர்களில் 8 மாணவர்களின் பெற்றோர் நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர். மாணவர்களையும் பெற்றோரையும் கடுமையாக எச்சரித்த நீதிபதி 8 மணாவர்களை விடுதலை செய்துள்ளார்.

இதேவேளை, ஏனைய மூன்று மாணவர்களையும் பெற்றோர் வரும் வரை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பொறுப்பில் வைத்திருக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.