யாழ்ப்பாணம், மண்டைதீவு கடலில் மிதந்துவந்த மர்ம பெட்டி ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 5 மணியளவில் மீட்கப்பட்ட குறித்த மரத்தாலான பெட்டியில் ஆயுதங்கள் இருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கடலில் மிதந்து வந்த குறித்த பெட்டி தொடர்பாக மீனவர்கள் சிலர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இப் பெட்டியானது மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட பெட்டி தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பெட்டியை திறந்து பார்ப்பதில் பொலிஸார் அச்சம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக பகுப்பாய்வு திணைக்களத்தின் உதவி கோரப்பட்டுள்ளது.