யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக மக்களை அச்சுறுத்தும் அனுமாஷ்ய சக்தி தொடர்பில் மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறான அச்ச நிலையை இல்லாமல் செய்யும் வகையில் விசேட பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.வடபுலத்தில் அண்மைக்காலமாக ஏற்பட்ட மர்ம மரணங்கள் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என யாழ்ப்பாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.எனினும், அதுவொரு அமானுஷ்ய சக்தி என யாழ் நகரின் கடை தொகுதிகளில் பேய்களை விரட்டும் பூஜை மற்றும் சடங்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நான்கு குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்த நிலையில் அவர்கள் ஆவிகளாக கடைத்தொகுதி வர்த்தகர்களுக்கு அழுத்தம் பிரயோகிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.அவர் உயிரிழப்பதற்கு முன்னர் 127 வர்த்தகர்கள் அந்த இடத்தில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு இலாபம் பெற்றுள்ளனர்.எனினும், தற்போது வர்த்தக நடவடிக்கைகளில் நட்டம் ஏற்படுவதுடன், பல்வேறு தடங்கல்களும் ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தற்போது அந்தப் பகுதிகளில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை 49ஆக குறைவடைந்துள்ளது.இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் காரணமாகவே அவர்கள் உயிரிழந்ததாக யாழ் சுகாதார அதிகாரிகள் அறிவித்த போதிலும், அது என்ன வைரஸ் என யாழ்ப்பாண வைத்தியர்களினால் கண்டுபிடிக்க முடியவில்லை என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த காலப்பகுதியில் இந்த வர்த்தக நிலையத்திலும், வர்த்தகர்களின் வீடுகளிலும் நம்ப முடியாத சில சம்பவங்கள் இடம்பெற்ற போதிலும், அதனை அதிகாரிகள் ஏற்றுகொள்வதாக இல்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.அதற்கமைய யாழ். வர்த்தகர்கள் அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்திவிட்டு, ஆவிகளை விரட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.