மரத்தை வெட்டியவருக்கு வினோதமான தண்டனை!!

திருச்சி வருமான வரித்துறை அலுவலகம் எதிப்புறம் சுமார் 20 வயதுடைய மரம் இரவோடு இரவாக வெட்டப்பட்டிருந்தது.நேற்று மாலை பார்த்த மரம் காலையில் காணவில்லை என்றதும் அதிர்ச்சி அடைந்த வழக்கறிஞர் கிஷோர்குமார் என்பவர் கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் மரத்தை வெட்டியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்திருந்தார்.அப்புகார் மீது நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறை துணை ஆணையர் மயில்வாகனன் உத்தரவிட்டார்.போலீசார் நடத்திய விசாரணையில் நாகராஜ் என்பவர் தான் நடத்தி வரும் வாட்டர் சர்விஸ் ஸ்டேஷனுக்கு வரும் வாகனங்களுக்கு இடையூறாக இருந்ததால் மரத்தை வெட்டியதாக ஒப்புக்கொண்டார்.இதனையடுத்து, கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் நகராஜையும், வழக்கறிஞர் கிஷோர்குமாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.அந்த பேச்சுவார்த்தையில் மரம் வெட்டப்பட்டதற்கு தண்டனையாக 20 மரங்களை நட்டு பராமரிக்க உத்தரவிடப்பட்டது.அதனை ஏற்றுக்கொண்ட நாகராஜ் இன்னும் இரண்டு தினங்களில் மரக்கன்று நடுவதாக உறுதி அளித்திருந்தார்.

Capturedfஇதனையடுத்து, இன்று முதல் கட்டமாக 10 மரக்கன்றுகளை தனது வாட்டர் சர்விஸ் ஸ்டேஷன் முன்பு நாகராஜ் நட்டார். அப்போது வழக்கறிஞர் கிஷோர்குமாரும் உடனிருந்தார்.