அண்மைக்காலமாக இலங்கைக்கு அதிநவீன மோட்டார் கார்கள் தரையிறக்கப்பட்டு வருகிறது.தற்போது இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் ஒருவர், அதிநவீன கார் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார்.பிரபல கிரிக்கெட் வீரரான அரவிந்த டி சில்வாவினால், குறித்த கார் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் பெறுமதி பல கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.இலங்கை கிரிக்கெட் தெரிவு குழுவில் இருந்து விலகிய அரவிந்த டி சில்வா குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருந்த நிலையில், இந்த கார் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.Bentley GT V8 S Coupe என்ற பிரிவை கொண்ட இந்த மோட்டார் வாகனம் இலங்கையில் ஒரு சிலரிடம் மாத்திரமே உள்ளது.அரவிந்த டி சில்வா கார்கள் மீது அதீத பிரியம் கொண்டுள்ளார். பல வகையான கார்களை அவர் வீட்டில் களஞ்சியப்படுத்தி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.