முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் அலுவலகம் ஒன்றில் காணப்பட்ட ஐனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் உருவப்படம் தாங்கிய விளம்பர பதாதை அடையாளம் தெரியாத நபர்களினால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.இந்தச் சம்பவம் புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு 9 ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள வேட்பாளரின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தச் சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.குறித்த, சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.