இன்னுமொரு சிறுமியின் கோர மரணம்!! கொலைகாரர்களுக்கு நடந்தது என்ன?

மூன்று காமுகர்களிடம் பசிக்கு இரையாகிய நிலையில், கடந்த 9ஆம் திகதி இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்ட 14 வயதுடைய ஹிருணிகாவின் இறுதி சடங்கு நேற்று இடம்பெற்றது.அம்பாந்தோட்டை திஸ்ஸமஹராம மாகம பகுதியில் இடம்பெற்ற இந்த கொடூரம் மீண்டும் மீண்டும் கூட்டு பாலியல் சம்பவத்தினை நினைவு கூர்ந்துள்ளது.

201712221708140489_Pune-8yearold-girl-gangraped-by-19yearold-boy-and-5_SECVPF
கடந்த செவ்வாய்கிழமை சரியாக இரவு 9 மணி அளவில் தொலைபேசி அழைப்பொன்று வருகின்றது.ஹலோ… சொல்லுங்க…. ஹிருணி ….. ஹிருணி….. என இருதடவைகள் மெல்லியக்குரலில் கேட்டது.சிறிது சலனத்துடன் சரளத்தின் மறைவை ஒரம்தள்ளி நோக்கியபடி கையடக்க தெலைபேசியில் தனது காதலனுடன் உரையாடினாள் ஹிருணிக்கா.உடனடியாக வீட்டிலிருந்து சற்று வெளியே வா ஹிருணி நான் உன்னை பார்க்க வேண்டும் ப்ளீஸ்… என கெஞ்சியுள்ளான்.

எதனையும் அறிந்திராத ஹிருணிக்கா சற்றும் தாமதிக்காமல்……சரி நான் வருகின்றேன். காத்திருங்கள் என அன்புகட்டளையிட்டு புறபட்டாள் வீட்டிலிருந்து.காதலன் அழைத்த அந்த மனித நடமாற்றமற்ற மர்ம பகுதிக்கு சென்றாள்…

வா ஹிருணி எனக்கு இன்று மனதிற்கு கஸ்ட்டமாக காணப்படுகின்றது ஆகையினால், மது அருந்தியுள்ளேன் என்னுடன் சில நிமிடங்கள் ஆறுதல் வார்த்தை கூறி அரவணைத்துக்கொள் என்றான். மனமுடைந்து பணிந்தாள் ஹிருணிக்கா… காதலனுக்கு அன்பு வார்த்தைகள் அரவணைப்பு உள்ளிட்ட அனைத்தையும் வரமாக அளித்து அவனை மனிதனாக்கினாள்.

பின்னரே அவளுக்கு அவனுடைய நண்பர்கள் இருவரும் அங்கிருப்பதனை அறிந்துக்கொண்டாள்.காதலனின் அனுமதியுடன், நண்பர்கள் இருவரும் அத்துமீறினர் ஹிருணிக்காவை.தன்னைக்காப்பாற்றிக்கொள்ள அத்தனை தெய்வ்ஙகளையும் மன்றாடினாள், முன்னோர்களையும் வேண்டி நின்றாள். எதுவும் பயனளிக்கவில்லை.காதலன் உள்ளிட்ட காமுகர்கள் மூவரின் இச்சைக்கு அச்சம் கொண்டு தன்னையும் தன் மானத்தினையும் இழந்து துடித்தாள் ஹிருணிக்கா.சரியாக அதிகாலை 2 மணியளவில் மீண்டும் வீடு திரும்பினாள் ஹிருணிக்கா.தன்னை பற்றி சிந்தித்து பல மணித்தியாலம் கண்ணீர் வடித்து 9 ஆம் வகுப்பில் கற்றுக்கொண்டிருந்த கல்வி அனுபவத்தினை கொண்டு எழுதுகிறாள் சான்று மடல்.

நாள் ஒருவாறு உயிர் பிழைத்து வந்து விட்டேன். தனது காதலன் உள்ளிட்ட மூவரே காரணம்… (அடைப்புக்குள் அவர்களின் பெயர்கள்).வாழ்க்கை விரக்தியானது. தனது உயிர் பாவம் இழைத்தது. யாரை நம்பி வாழ்வது இத்தனை கேள்விகளுக்கும் பதிலளிக்க பிரியப்பட்டாள்.வாழ்கை நோக்கிய ஆசை தவிர்த்து மாசுபடிந்த உடம்பை மண்ணுக்கு சொந்தமாக்க தீர்மானித்து கழுத்தில் சுறுக்கிட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டாள்.

அனைவரையும் துயில் எழுப்பிய சூரியன் ஹிருணிக்காவை சயணத்திலிருந்து எழுப்பவேயில்லை.இரவு 9 மணிக்கு நித்திரைக்கு சென்ற ஹிருணி ஏன் இத்தனை மணித்தியாலம் நித்திரைக்கொள்கிறாள். பெற்றோருக்கு சந்தேகம்.

ஹிருணி… ஹிருணி நித்திரை காணும்…. முகம் கழுவு என கதவை தட்டி விட்டு பெற்றோர் அன்றாட வேலைகளை கவனித்துக்கொண்டிருந்தனர்.ஆனால் ஹிருணிக்காவின் தாமதம் கதவை உடைப்பதற்கு தூண்டியது.

கதவை உடைத்த பெற்றோர் அதிர்ச்சியில் மயங்கினர், ஒன்றும் புரியவில்லை. சிறிது நேரத்தின் பின்னர் அவள் எழுதிய கடிதம் அவர்களை மீண்டும் சோதனைக்குட்படுத்தி சித்திரவதைக்குட்படுத்தியது.காவல் நிலையத்தில் முறைப்பாடு, அயலவர்களில் முக்கியமானவர்களின் கிசு கிசு … இவ்வாறிருக்க ஹிருணி எழுதிய கடிதம் தொடர்பான தகவல் வெளியானது ஊர் மக்களிடையே திரண்டது இளைஞர் படை.. குறித்த மூவரையும் தேடாத இடமில்லை, பின்னர் யால வனப்பகுதியில் மூவரும் மறைந்திருப்பது கண்டறியப்பட்டது.

வனம் இளைஞர்களால் சுத்திகரிக்கப்பட்டது. மூவரும் பிடிக்கப்பட்டனர். நையப்புடைக்கப்பட்டனர். காவல் துறையினரிடமும் ஒப்படைக்கப்பட்டனர்.வழமையைபோன்று காவல் துறையினர் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி எதிர்வரும் 23 ஆம் வரை விளக்கமறியலையும் பெற்றுக்கொடுத்துள்ளனர்.தரம் 9 இல் கல்வி பயின்ற ஹிருணியின் கனவுடன் பெற்றோர் சோகத்தில் கண்ணீருடன் காலத்தை நோக்கி காத்திருக்கின்றனர் சமுதாயத்திற்கு மதுவிலிருந்து கிடைக்கவிருக்கும் விடிவிற்காய்.